முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்

by Staff / 11-05-2023 04:44:28pm
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்

தமிழக அமைச்சரவை சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மன்னார்குடி எம்எல்வாக இருந்து இன்று புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு, தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை, திட்டம், மனிதவளம், புள்ளியியல், தொல்லியல்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மு.பே.சாமிநாதனுக்கு தகவல் மற்றும் விளம்பரத்துறையுடன் கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையும், மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், துறைகள் மாற்றியமைக்கப்பட்ட மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

 

 

Tags :

Share via

More stories