ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் தேர்தலில் இம்ரான் கான் போட்டி

by Staff / 19-08-2024 03:04:40pm
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் தேர்தலில் இம்ரான் கான் போட்டி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான இம்ரான் கான் வேந்தர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முறைப்படி விண்ணப்பித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தற்போதைய அதிபர் கிறிஸ் பேட்டன் ராஜினாமா செய்த நிலையில், வருகிற அக்டோபர் இறுதி வாரத்தில் வேந்தர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பிரிட்டன் முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், டோனி பிளேர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

 

Tags :

Share via