இரட்டை குழந்தை விவகாரம்; நாளை அறிக்கை-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Editor / 25-10-2022 02:15:53pm
இரட்டை குழந்தை விவகாரம்; நாளை அறிக்கை-அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள 3 அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள தீக்காயப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவார்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு 180 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்துகள் குறைவான அளவில் இருந்தாலும் கூட விபத்துகளே இருக்க கூடாது என்று அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். தற்போது தீக்காயத்தால் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் 17% அளவில் மட்டுமே தான் தீ காயம் எற்பட்டுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றார். ஆனாலும் கூட இந்த ஆண்டு நிறைய சிறுவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.மேலும் அவர் கூறும்போது, நயன்தாரா விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் எனவும், அதேபோல, தனியார் தொலைக்காட்சியில் வாடகை தாய் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட செய்தி குறித்தும் அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via