பேரிஜம் ஏரியில் புதிதாக நாளை முதல் பரிசல் சவாரி துவக்கம்- வனத்துறை அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராஜபுரம் சூழல் மேம்பாட்டு குழு மூலமாக பேரிஜம் ஏரியில் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இயற்கை சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இயற்கைக்கு இடையூறு ஏதும் ஏற்படாத வகையிலும், நாளை முதல் புதிதாக பரிசல் சவாரி இயக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவிப்பு.பரிசல் சவாரிக்கு நபர் ஒருவருக்கு 150 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தகவல்.ஏற்கனவே கொடைக்கானல் மன்னவனூர் இயற்கை ஏரியில் பரிசல் இயக்கம் உள்ளது.
Tags : பேரிஜம் ஏரியில் புதிதாக நாளை முதல் பரிசல் சவாரி துவக்கம்- வனத்துறை அறிவிப்பு.