டெல்லியில் ஆதரவற்றோரின் கிட்னியை அபகரித்து விலை பேசிய கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது

டெல்லியில் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் கிட்னியை அபகரித்து விலை பேசிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பணத்தேவை அதிகமாக உள்ள ஏழைகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்து வந்து கிட்னி ஆபரேசன் செய்து அவர்களின் கிட்னியை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ மனைகள் மீது போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில் பத்து பேரை கைது செய்துள்ளனர்.
Tags : 10 arrested in Delhi for kidnapping the kidneys of the poor and helpless