3 கிலோகஞ்சா மற்றும் ரூ 1, 30, 000 பணத்தை பறிமுதல்: இருவர் கைது

by Staff / 12-10-2023 02:29:33pm
 3 கிலோகஞ்சா மற்றும் ரூ 1, 30, 000 பணத்தை பறிமுதல்: இருவர் கைது

பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சாலை செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் கோமங்கலம் காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக சாலையோரம் நின்ற காரை சோதனையிட்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ 1, 30, 000 பணத்தை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்த செல்லப்பாளையத்தை சேர்ந்த லாரி ஒட்டுநர் செந்தில்குமார் (23) பொள்ளாச்சி ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே பானிபூரி விற்பனை செய்யும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரஜேந்திரா சிங் (26) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.மேலும் காரில் கொண்டு வரும் கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்ய இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது,பின்னர் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo