சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த திருநங்கைகள்

by Staff / 23-02-2024 01:15:29pm
சிறுவனுக்கு பாலியல் தொல்லையளித்த திருநங்கைகள்

சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறையன்று வெளியே சிறுவன் விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் விளையாட சென்ற சிறுவனை காயத்ரி, முல்லை என்ற இரண்டு திருநங்கைகள் பிரியாணி வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் சீண்டல்   செய்துள்ளனர். அடுத்த வாரம் மீண்டும் அழைத்து சென்று நான்கு மணி நேரம் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருநங்கைகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு   விசாரணை நடந்து வந்த நிலையில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories