பட்டாசு ஆலைக்கு மீண்டும் சீல். 3 பேர் மீது வழக்கு பதிவு...

by Staff / 08-07-2024 02:11:57pm
பட்டாசு ஆலைக்கு மீண்டும் சீல். 3 பேர் மீது வழக்கு பதிவு...

சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் சப்-கலெக்டர் பிரியாரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆலை கடந்த ஆண்டு விதி மீறல்கள் காரணமாக ஏற்கனவே தற்காலிமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் அங்கு சட்ட விரோதமாக அதிக தொழிலாளர்களை வைத்து பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த விதிமீறல் குறித்து மாரனேரி விஏஓ சுந்தரேசன் மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலையின் உரிமையாளர் நீராத்திலிங்கம், போர்மென் இருளப்பன், மேனேஜர் சங்கர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo