13 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 8 பேர் கர்ப்பம் ; ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

by Staff / 06-04-2022 12:37:29pm
13 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; 8 பேர் கர்ப்பம் ; ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் நகரில் உறைவிடப்பள்ளியில், ஹெரி வைரவன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, கல்வி உதவித்தொகையில் தங்கி படிக்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 13 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

இதில் 8 மாணவிகள் கர்ப்பமாகியுள்ளனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் பாண்டுங் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஆசிரியர் ஹெரி வைரவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அந்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

 

Tags :

Share via

More stories