அரசு பள்ளியில் மாத்திரை சாப்பிட்டு மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு

by Staff / 14-02-2023 05:35:43pm
அரசு பள்ளியில் மாத்திரை சாப்பிட்டு மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு

கரூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் குடல் புழு நீக்கம் முகாம் நடைபெற்று வருகிறது.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு 184 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் மாத்திரையை சாப்பிட்ட 6 பெண்கள் 4 ஆண்கள் என மொத்தம் 10 மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வாமை காரணமாக வாந்தி ஏற்பட்டுள்ளது. மாணவர்களை உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. வாந்தி எடுத்ததால் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.கரூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்கம் முகாமில் மாத்திரை சாப்பிட்டு மாணவர்கள் வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குறிப்பாக மருத்துவ குழுவினர் பள்ளிக்கு வருகை தந்து அனைத்து மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via