ஸ்வீடனில் விபத்து:  விமானி உட்பட 9 பேர் பலி

by Editor / 09-07-2021 05:21:26pm
ஸ்வீடனில் விபத்து:  விமானி உட்பட 9 பேர் பலி

ஸ்வீடனில்  ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட விமானத்தில் இருந்த 9 பேரும் பலியானார்கள்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது. நேற்று இரவு 7 மணியளவில் ஒரேப்ரோ விமான நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்தது. அடுத்த சில வினாடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது.
விமானி மற்றும் 8 ஸ்கை -டைவிங் வீரர்கள் மொத்தம் 9 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘ஒரேப்ரோவில் விமான விபத்து குறித்த வேதனைத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆழந்த துயரமுற்றேன். மிகவும் துயரமான இந்த நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பற்றிய சிந்தனை தான் எனக்கு’ என்று பிரதமர் ஸ்டீபன் லோவென் கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆண்டும் வடக்கு ஸ்வீடனில் இதேபோல விமான விபத்தில் 9 பேர் பலியானார்கள். தரையிலிருந்து மேலே கிளம்பிய சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்கு உள்ளானது.

 

Tags :

Share via

More stories

Logo