திருச்செந்தூரில் குவிந்த பகதர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்.

by Editor / 30-07-2023 10:45:54am
 திருச்செந்தூரில் குவிந்த பகதர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை  வீடான உலகப் புகழ்பெற்ற  திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த ஆன்மீக ஸ்தலமாகவும்,  கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும்  விளங்கி வருகிறது. மேலும் இந்த கோவிலுக்கு திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறிப்பாக சென்னை, கோவை,  திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடியதுடன் நாழிக்கிணறு தீர்த்தத்திற்கும் சென்று புனித நீராடி  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டம் காரணமா பொது தரிசன வரிசை மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளும்  கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

 

Tags :

Share via