திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவாகிறது

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவாகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைதான அவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு பிறகு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் கடந்த ஓராண்டாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சமீபத்தில் 38வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செந்தில் பாலாஜி தொடர்புடைய மீம்களை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Tags : திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவாகிறது