ரயிலில் செல்லும் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிப்பு

சென்னை பேசின்ப்ரிட்ஜ் ரயில் நிலையம் அருகே ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கையில் வைத்திருக்கும் செல்போன்களை, கம்பு கொண்டு தட்டிப் பறித்த வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20), சுகுனேஷ் (22) இருவரையும் ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தும் நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும்.
Tags :