"பாஜக நிர்வாகிகளே என்னிடம் சரியாக பேசுவதில்லை" நயினார் நாகேந்திரன்

பாஜக நிர்வாகிகளை போனில் தொடர்புகொண்டு பேசினால் பாதிபேர் வணக்கம் கூட சொல்வதில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தத்துடன் கூறியுள்ளார். செங்கல்பட்டில் பாஜக சார்பில் நடைபெறும் பூத் நிர்வாகிகள் பயிலரங்கில் பேசிய அவர், கிளை செயலாளர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசும்போது என்னை யார் என்றே தெரியவில்லை என்றார். கடலூரை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரை போனில் தொடர்புகொண்டபோது, என்னை அவரது நைனா என நினைத்துக்கொண்டு எச்சரித்துவிட்டு அழைப்பை துண்டித்தார் என வேதனை தெரிவித்துள்ளார்.
Tags :