முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 01-03-2025 12:49:13pm
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுக-வினர் செய்து வருகின்றனர். வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via