குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ்

by Staff / 23-11-2023 01:16:29pm
குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் : காங்கிரஸ்

நடிகை குஷ்பு அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலையே திமுக, காங்கிரஸ், தற்போது பாஜக என பல கட்சிகளுக்கு மாறிவிட்டார். தொடர்ந்து எதாவது பேச தெரியாமல் பேசி சர்சைகளிலும் சிக்கிக்கொள்கிறார். இந்தநிலையில், பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் விதத்தில் தனது X தளத்தில் ஒருவரை “சேரி மொழி" என்று விமர்சனம் செய்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனட். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் குஷ்பு பதிவில் இருந்து 'சேரி மொழி" என்பதை நீக்கிவிட்டு, குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளனர் .பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பு-க்கு எங்கிருந்து தைரியம் வந்தது எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo