தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2026 தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கழகம் ஆறு தொகுதிகளை கேட்ட நிலையில் திமுக தரப்பில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வந்ததாகவும் திமுகவின் பெரிய அண்ணன் மனப்பான்மை மற்றும் தமிழக வாழ்வுரிமை கழகத்தின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிப்பது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தமிழக அரசு பணிகளின் 100 சதவீத தமிழர்களுக்கு முன்னுரிமை மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு போன்ற தமிழக வாழ்வுரிமைக் கழகத்தின் கோரிக்கைகளை திமுக அரசு ஏற்கவில்லை என்றும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் மதவாத அரசியலை முன்னெடுக்கும் பாரதிய ஜனதா கட்சியை தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் இணைய போவதில்லை என்றும் தெளிவு படுத்தினார் சிறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Tags :



















