ரயில்கள் மோதலை தடுக்க ரயில்வே தீவீரம்

பயணிகள் ரயில்கள் மோதலை தடுக்க 6,000 கி.மீ. தொலைவுக்கு 'கவச்' கருவியை பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,465 கி. மீ. ரயில் பாதைகள் மற்றும் 139 இன்ஜின்களில் 'கவச்' கருவி பொருத்தியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 6,000 கி.மீ. பாதையில் கவச் கருவியை பொருத்துவது குறித்த ஆய்வும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.
Tags : ரயில்கள் மோதலை தடுக்க ரயில்வே தீவீரம்