சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நவராத்திரி, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

by Editor / 27-09-2022 09:02:03am
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நவராத்திரி, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

1.  தாம்பரத்திலிருந்து  செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 21 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில்  நாகர்கோவில்  - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 5 புதன்கிழமை அன்று நாகர்கோவிலி லிருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். .
2. நாகர்கோவில்  - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06040) அக்டோபர் 25 செவ்வாய் கிழமை அன்று நாகர்கோவிலி லிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
அக்டோபர் 25 அன்று இயக்கப்பட இருக்கும் நாகர்கோவில் -  தாம்பரம் அதிவிரைவு ரயில் (06040) சாத்தூர் தவிர மற்ற ரயில் நிலையங்களில் இன்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு  பெட்டிகள் இணைக்கப்படும்.

 

Tags : நவராத்திரி, தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்

Share via