இனி புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் கிடையாது 

by Editor / 07-06-2021 05:17:32pm
இனி புதிதாக யாருக்கும் கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் கிடையாது 



புதிதாக இனி யாருக்கும் கோவாக்சின் முதல் டோஸ் செலுத்தப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக தடுப்பூசி போடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பின் அளவு அதிகம் காணப்பட்டதால், டெல்லியிலுள்ள மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டெல்லியில் கோவாக்சின் தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை கோவாக்சின் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது மே மாதம் கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த மாதத்தில் இரண்டாம் தவணை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மட்டும் இனி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்படும் எனவும், முதல் தவணையாக இனி யாருக்கும் தடுப்பூசியை கொடுக்க வேண்டாம் எனவும் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via