Al காதலியை நம்பி ரூ.24 லட்சத்தை இழந்த நபர்

by Staff / 27-02-2025 01:36:09pm
Al காதலியை நம்பி ரூ.24 லட்சத்தை இழந்த நபர்

சீனாவின் ஷாங்காயில் ஒரு நபர் Al-ல் உருவாக்கப்பட்ட பெண்ணை காதலி என்று நம்பி காதலித்து, கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.24 லட்சம் ரூபாயை இழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோசடி செய்த நபர்கள் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, ஒரு பெண் பேசுவது போன்றும் மற்றும் ஒரு இளம் பெண்ணின் படங்களை வைத்து கற்பனையாக 'Ms. Jiao' என்ற பெண் கதாபாத்திரத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via