ஜெயலலிதா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை.
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் நினைவிடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தினார். அவருடன் தொண்டர்கள் பலரும் வந்திருந்த நிலையில், அதிமுகவினர் ஒன்று சேர்ந்து, ‘குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம், எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி பூண்டனர். அதன் பின்பு, ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்.
Tags :