தாயார் திட்டியாதல் மனமுடைந்த சிறுவன் தற்கொலை

by Editor / 23-05-2025 01:44:28pm
  தாயார் திட்டியாதல் மனமுடைந்த சிறுவன் தற்கொலை

மேற்கு வங்காளம்: கிருஷ்ணேந்து தாஸ் என்ற 13 வயது சிறுவன் சமீபத்தில் ஒரு கடையில் சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதைப் பெற்றோரிடம் கூறியபோது, சிறுவனின் தாயார் மகனை கடைக்கு அழைத்துச்சென்று அனைவர் முன்னிலையிலும் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டார். ’அம்மா நான் திருடவில்லை' என அவர் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர் .

 

Tags :

Share via