2 கோடி பேருக்கு இலவச வீடுகள் - நிதியமைச்சர் அறிவிப்பு

by Staff / 01-02-2024 12:11:30pm
2 கோடி பேருக்கு இலவச வீடுகள் - நிதியமைச்சர் அறிவிப்பு

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027-ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும். 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு. மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன' என்றார்.

 

Tags :

Share via