பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது

by Staff / 01-09-2024 03:49:27pm
பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது

நெற்கட்டும்செவல் மாமன்னர்  பூலித்தேவர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க  வருகை தந்த
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் :தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது சரியல்ல என்றும்  தொடர்ந்து பொதுப்பணித்துறை பராமரிப்பிலேயே அந்த அருவி இயங்கிட நடவடிக்கை எடுக்குமாறும் பழைய குற்றாலம் மீட்பு குழு என்கிற பெயரால் இயங்கி வரும் பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள  அமைப்புகள் கையொப்பமிட்ட  கோரிக்கை விண்ணப்பத்தைக்கொடுத்து விளக்கிச் சொன்னேன்.

 அனைத்து கட்சியினரும் மாவட்ட ஆட்சியரிடம் சந்தித்து முறையிட்டதையும்,
 வாட்ஸ் அப் மூலம் அனைத்து கட்சியினர் கையொப்பமிட்ட முறையீட்டை அமைச்சருக்கு அனுப்பி வைத்ததையும் நினைவு படுத்தினேன்.இதுகுறித்து துறை அமைச்சர்களிடமும்,மாவட்ட நிர்வாகத்திடமும் பேசிவிட்டேன் என்றும்,  பழைய குற்றாலம் அருவி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும்,
 நீண்ட காலமாக எவ்வாறு அந்த  அருவி பயன்பாட்டில் இருந்து வருகிறதோ அவ்வாறே தொடர்ந்து இருக்கும் என்றும் உறுதி அளித்தார்கள்.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஈ.ராஜா MLA ,வே.ஜெயபாலன் ஆகியோரும் நமது கருத்தை வழிமொழிந்தனர்.

மக்களின் உணர்வை   ஒருங்கிணைந்து பிரதிபலித்துக் கடமையாற்றிய மதிமுக, சிபிஎம்,
 சி பி ஐ , விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,
தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை,ஆதித்தமிழர் கட்சி,அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடத் தமிழர் கட்சி, விவசாயிகள் நலச்சங்கம், ஆயிரப்பேரி  ஊராட்சி மன்றம் உள்ளிட்ட அமைப்புகள், இயக்கங்கள் அனைவரின் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக அமைந்துள்ளது.

 திமுக காங்கிரஸ் அதிமுக ஆகிய கட்சிகளும் இக்கோரிக்கையினை தனித்தனியே வலியுறுத்தி வந்தனர்.
அனைத்துக் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று மக்களின் நலன் காக்க  நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களுக்கும், மக்களின் உணர்வை புரிந்து கொண்டு இயங்குகிற மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

பழைய குற்றாலம் அருவியை 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறேன் ..

 

Tags :

Share via