இளைஞர் கல்லால் அடித்துக் கொலை

மதுரை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த சதக் அப்துல்லா(29) டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று நள்ளிரவு பெரியார் பேருந்து நிலையம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த கும்பல் ஒன்று சதக் அப்துல்லாவை அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்து தப்பியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திடீர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்பது குறித்த கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :