நகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்
நகராட்சிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 2,500 பேருக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வு அடிப்படையிலும், 15 சதவீதம் பேர் நேர்காணல் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.
Tags :



















