பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரிசாலை மறியல்

by Admin / 24-07-2024 01:13:21pm
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரிசாலை மறியல்

2023-24 ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி  மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.கடந்த (2023) ஆண்டு  பெய்த கன மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் விவசாயிகள் பயிரிட்ட உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெங்காயம், கொத்தமல்லி, கம்பு ,உள்ளிட்ட பயிர்கள் கடும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் பெறும் நஷ்டம் அடைந்தனர்.பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெறவில்லை இதனால் விவசாயிகள் பெறும் மன வேதனை அடைந்துள்ளனர்.இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் தற்போது வரை எந்த தேர்வும் எட்டப்படாத நிலை உள்ளது ,இப் பருவ ஆண்டிற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில் விவசாயிகள் வருவாய் இன்றி பெறும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒளிவு மறைவின்றி  தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்து அறிவிப்பு விளம்பரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும்  மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரிசாலை மறியல்
 

Tags :

Share via