லாரி மீது மோதிய டெம்போ - 12 பக்தர்கள் பலி
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி ஷாம்பாஜி நகரில் உள்ள சம்ருதி விரைவு சாலையில் பயங்கர சாலை விபத்து நடந்தது. பக்தர்களை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு மாத குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் சைலானி பாபாவை பார்க்கச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த போது பேருந்தில் 20 பயணிகள் இருந்த நிலையில், 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்களை மீட்ட போலீசார் உள்ளூர் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
Tags :














.jpg)
.jpg)



