மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் ஒரு ஒப்பந்த ஊழியர் கைது.

மதுரை மாநகராட்சி முறைகேடு குறித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவுபடி டி.ஐ.ஜி., அபிநவ்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 8 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி 51-வது வார்டு திமுக கவுன்சிலரும், வரிவிதிப்புக்குழு தலைவருமான விஜயலட்சுமி, 96 வது வார்டு (ஹார்விபட்டி) ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு உதவிகமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரணை நடத்தினர். இவர்களில் செந்தில் பாண்டிக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது.
இதை தொடர்ந்து செந்தில்பாண்டியை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் நாச்சியார் படுத்தி சிறையில் அடைத்தனர். தேவையெனில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என விஜயலட்சுமியிடம் எழுதி விஙஅகி விட்டு அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி ஏற்கனவே மண்டல தலைவர்களுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: மேலும் ஒரு ஒப்பந்த ஊழியர் கைது