இன்றும் நாளையும் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 31-08-2022 09:40:48am
இன்றும் நாளையும் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகம், கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

31.08.2022: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், மதுரை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 16 மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

01.09.2022: தமிழகத்தில் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo