: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தி
ஈகைத் திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹீம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது .இறை நம்பிக்கை தியாகம் கருணை பகிர்வு மனிதநேயம் ஆகிய உயரிய விரும்பங்களை மனித குலத்திற்கு உணர்த்தும் புனித பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது. ஏழை எளிய மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் சமூகத்தில் அன்பும் சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனித நேயமும் மத நல்லிணக்கமும் மேலும்ல துலங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags :


















