மிசோரம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

by Editor / 07-11-2023 09:23:55am
மிசோரம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக இன்று 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவ.17இல் தேர்தல் நடைபெற உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் டிரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் உள்ள வாக்கு மையங்களுக்கு வாக்காளார்கள் சென்று வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : மிசோரம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

Share via