கொலை வழக்கு  குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு.

by Editor / 28-11-2024 11:33:22pm
 கொலை வழக்கு  குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட மேல மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஏழுமலை மற்றும் அவரது மனைவி கலாவிற்கும் இடையே நடந்த சண்டையை அதே பகுதியை சேர்ந்த சாமுவேல்துரை பாண்டி என்பவர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் சாமுவேல் துரைபாண்டி(70) யை  ஏழுமலை கொலை செய்த வழக்கில் குற்றாலம் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

 

Tags :  கொலை வழக்கு  குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு.

Share via

More stories

Logo