துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

by Editor / 27-01-2023 09:12:29am
துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்

நாடு முழுவதும் 74வது குடியரசு தினவிழா நேற்று  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் குடியரசு விழாவிற்கு தாமதாக வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஹைதராபாத்திலுள்ள போர் நினைவு சின்னத்தில் சரியாக காலை 7 மணிக்கு மலரஞ்சலி செலுத்தி விட்டு காலை 7.15 மணிக்கு தெலங்கானா ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி விட்டு சரியாக காலை 8 மணியளவில் ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டேன்.புதுச்சேரி வான் எல்லையை அடைந்த நேரம் காலை 9 மணி. அந்த நேரத்தில் புதுச்சேரியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் புதுச்சேரி ஏர் டிராபிக் கண்ட்ரோலரின் அனுமதிக்காக காத்திருந்தோம். அப்போது அவர் மோசமான வானிலை காரணமாக புதுச்சேரியில் விமானம் தரையிறங்க முடியாது. வேண்டுமென்றால் சென்னையில் விமானம் தரையிறங்கி, சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு வந்து சேரலாம் என்று தெரிவித்தார்.

குடியரசு தின நிகழ்ச்சியை மனதில் வைத்து வானிலை சரியாகும் வரை புதுச்சேரி வான்வெளியில் சுற்றி வானிலை சற்று சரியானதும் ஏர் டிராபிக் கண்ட்ரோலரின் அனுமதி அளித்த பிறகு சரியாக 9.45 மணிக்கு தான் புதுச்சேரி விமான நிலையத்தில் தரையிறங்க முடிந்தது. இதற்கான காரணம் என் கையில் இல்லை. மோசமான வானிலையே காரணம்.

புதுச்சேரி மக்களின் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று தனி விமானத்தை ஏற்பாடு செய்து தெலங்கானாவில் குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சரியான நேரத்தில் தான் கிளம்பினோம். மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்திற்கு புதுச்சேரிக்கு வந்து சேர முடியவில்லை. இதை புரியாமல் விமர்சிப்பவர்களுக்கு இது தான் சிறந்த பதிலான இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via