நீட் இளநிலை கருணை மதிப்பெண்கள் விவகாரம்- மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம்
ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு எழுத விரும்புகின்ற 1563 விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அட்டையை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றம் தேசிய முகமைக்கு அனுமதி அளித்துள்ளது..
நீட் இளநிலை 2024 இல் தேசிய தேர்வு முகமை என். டி .ஏ கருணை மதிப்பெண்கள் வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை 1563 தேர்வுகளுக்கு தேர்வின் போது நேர இழப்புக்காக மறு தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான மையத்தின் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.. மே 5 அன்று 1563 மாணவர்களின் முடிவுகளைமறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வை நடத்தப் பரிந்துரைத்துள்ளது நீட் யூ.ஜி தேர்வு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. நீட் யூ.ஜி தேர்வில் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்சனை இல்லை என்றும் தாள் கசிவு ஊழல் முக்கியமானது என்றும் கூறியுள்ளது .
Tags :