110 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட புலி

by Staff / 29-04-2023 11:03:38am
110 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட புலி

ஹரியானா மாநிலம் யுமுனாநகர் மாவட்டத்தில் உள்ள காலேசர் தேசிய பூங்காவில் 110 ஆண்டுகளுக்கு பிறகு புலி ஒன்று தென்பட்டது. பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் புலி சுற்றித் திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த பூங்காவில் கடைசியாக 1913ஆம் ஆண்டு புலி காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், புலி உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜாஜி தேசிய பூங்காவில் இருந்து காலேசர் பூங்காவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. இந்தப் புலி ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்தப் பூங்காவில் காணப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo