உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற தென் ஆப்பிரிக்கா

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, ஐசிசி தொடர்களில் 27 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக கோப்பை வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., 212 ரன்களும், தென்.ஆப் 138 ரன்களுக்கும் சுருண்டன. பின் 2-வது இன்னிங்ஸில் ஆஸி., 207 ரன்கள் குவிக்க, வெற்றிக்கு 282 ரன்கள் என்ற கடின இலக்குடன் தென்.ஆப் களமிறங்கியது. மார்க்ரம் 136, கேப்டன் பவுமா 66 ஆகியோரின் ஆட்டத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்.ஆப் அபார வெற்றி பெற்றது.
Tags :