பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு.

by Editor / 07-01-2023 05:37:48pm
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி நகைகள் திருட்டு.

விழுப்புரம் வழுதரெட்டி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவருடைய பேரனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
 
அவரைப் பார்ப்பதற்காக, கடந்த 5ஆம் தேதி மாலை மோகன்குமார், தனது வீட்டை பூட்டிவிட்டு வேலூருக்குச் சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பேரனை பார்த்துவிட்டு, மீண்டும் நேற்றிரவு 9 மணியளவில் மோகன்குமார் விழுப்புரம் வந்தார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்தப் புகாரின் பேரில்,  விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தியதோடு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, திருடுபோன வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories