ம தி மு க- திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்,பொதுச் செயலாளர் வைகோ.

by Admin / 27-06-2026 11:48:47pm
ம தி மு க- திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்,பொதுச் செயலாளர் வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது கூட்டத்திற்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். திமுக கூட்டணியில் தங்கள் சுயமரியாதை மற்றும் தனித்துவ அடையாளத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 9 ஆண்டு கால திமுக உடனான கூட்டணியை மதிமுக முடித்துக் கொண்டதாகவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாதிமுக போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை முழுமையாக ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து செயல்பட போவதாகவும் தெரிவித்தார். தங்கள் கட்சி இரண்டு எம்எல்ஏக்களை ராஜனமா செய்யச் செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறச் செய்யலாம் என்று விஜய் கூறியதாகவும் தெரிவித்தார். திமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை சற்று கூட மதிப்பதில்லை என்றும் தேசிய திராவிட முற்போக்கு கட்சிக்கு 10 இடங்களும் ஒரு ராஜ்யசபா இடங்களும் கொடுத்ததோடு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு 8 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியதாகவும் ஆனால் மதிமுகவிற்கு இரண்டு தொகுதி ஒதுக்கி அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் நிர்பந்தித்ததாகவும் முதலமைச்சராக இருந்த ஸ்டாலினை சந்திப்பதற்கு நேரம் கேட்ட பொழுது அவர் ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதனால் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

 

Tags :

Share via
Logo