இயக்குனரும் கதாசிரியரும் நடிகருமான கே பாக்கியராஜ் இன்று காலமானார்.

by Admin / 27-06-2026 12:02:54pm
இயக்குனரும் கதாசிரியரும் நடிகருமான கே  பாக்கியராஜ் இன்று காலமானார்.

தமிழ் திரை உலகில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படும் கே . பாக்கியராஜ் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து அவரோடு பல்வேறு படங்களுக்கு பங்களிப்பு செய்த பின் அவரால் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியதோடு தானே கதாநாயகனாக நடித்தவர் பாக்கியராஜ். அவரின் தனித்திறன் வாய்ந்த திரைக்கதை  இந்திய திரை உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்பட்டது. 

பாரதிராஜாவை போன்று இவரும் பல்வேறு இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனர். பலரையும் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். எம்ஜிஆர் இவரை தன்னுடைய கலை வாரிசாக அறிவித்தார். அவர் வளர்ந்து வருகின்ற பொழுது பிரவீனா என்கிற  துணை நடிகை  திருமணம் செய்திருந்தார், அவர் மஞ்சள் காமாலை நோயால் இறந்த பின்னர் அன்றைய தினத்தில் பிரபலமாக இருந்த பூர்ணிமாவை திருமணம் செய்து வாழ்க்கையில் தொடங்கினார்தனித்து ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கி பின்னர் அதை நடத்த முடியாமல் அதை கலைத்து விட்டார். பாக்கியா என்கிற வார இதழை நடத்தி அதற்கு ஆசிரியராக இருந்து வந்தார். .அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் .இருவரும் திரைப்பட துறையோடு தொடர்புடையவர்கள். நடிகரும் இயக்கருமான பாக்கியராஜின் உடலுக்க அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo