இன்று தமிழக முதலமைச்சர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் அங்கு சொட்டு மருந்து போட வந்திருந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி அவர்களுக்கு பொம்மைகளை பரிசாக வழங்கினார். இன்று தமிழ்நாடு முழுவதும் ஐந்து வயதிற்கு உட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 43 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம் அங்கன் காவடி மையம் பேருந்து மற்றும் ரயில் நிலையம் என முகங்கள் இயங்குகின்றன. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
Tags :



















