திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கருணாஸ் கட்சி

by Staff / 21-03-2024 12:22:50pm
திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் கருணாஸ் கட்சி

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை அளிக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் காங்கிரஸ், 10, சிபிஐ, சிபிஎம் தலா 2 தொகுதிகள், விசிக 2, மதிமுக, கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு மமக, தவாக, மநீம உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. அதே போல், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளார். அவர் 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதனால் சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சியினர் கருணாஸ்-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo