லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு தெரிவித்தார்.
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தயாராக இருப்பதாகவும் ஹெஸ்புல்லாவின் எந்த ஒரு மிரட்டலுக்கும் வலுக்கட்டாயமாக பதிலடி கொடுப்பதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு தெரிவித்தார்.
போர் நிறுத்த உடன்படிக்கை நேற்று மாலையில் தனது அமைச்சரவையில் வைக்க உள்ளதாகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சரவை இதற்கு முன்னதாகவே ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்
.கடந்த ஆண்டு காசா போரினால் ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற மோதலுக்கு முடிவு கட்டுவதற்கான வழியை தெளிவுப்படுத்தும் இந்த ஒப்பந்தம் புதன்கிழமை நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இஸ்ரேல் பிரதமர், நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம் என்றும் எந்த ஒரு மீறலுக்கும் வலுக்கட்டாயமாக பதிலளிப்போம் என்றும் இம்முயற்சியில் நாங்கள் வெற்றி பெற வரை தொடர்வோம் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா முயன்றிருக்கும் இந்த ஒருங்கிணைப்பில் நாங்கள் முழுமையான எண்ணத்தோடு ஈடுபடுவோம் என்றும் ஹெஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறினால் நாங்களும் அதற்கான தாக்குதலில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். ஈரானுடன் இணைந்தஹெஸ் புல்லா முன்பு இருந்தது போன்று பலமாக இல்லை என்றும் அவ்வமைப்பு பலகீனமாக மாறிவிட்டதாகவும் கூறினார்.
எங்கள் போர் அவர்களை அதிக அளவு வீழ்த்தி பல நூற்றாண்டு பின்னடைவை எதிர் நோக்க வைத்து விட்டது. அவர்களின் முக்கிய தலைவர்களையும் ராக்கெட்டுகளையும் ஏவுகணைகளையும் அழித்ததோடு பல போர் வீரர்களையும் அவர்களுடைய பயங்கரவாத உள்கட்டமைப்பையும் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
லெபனான் முழுவதும் அவர்களுடைய நோக்கத்தை தகர்த்ததாகவும் பெய்ரூட்டையும் வலுவிழக்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இருவரின் முயற்சியின் காரணமாக போர் நிறுத்த அறிவிப்பு நல்லதொரு வழியை உருவாக்கும் என்றும் இது ஒரு ராஜதந்திர முன்னேற்றமாக இருக்கும்.
இஸ்ரேல் பை ரூட் மற்றும் லெபனானின் பிற பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை முடுக்கிவிட்டதன் காரணமாக 18 பேர் கொல்லப்பட்டனர்.
Tags :