சேற்றில் இருந்து எண்ணெய் திருடிய மக்கள்..

by Editor / 03-06-2025 04:42:16pm
சேற்றில் இருந்து எண்ணெய் திருடிய மக்கள்..

உ.பி: அமேதி மாவட்டத்தில் உள்ள வராணாசி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், சமையல் எண்ணெய் டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் காயமடைந்த ஓட்டுநர் ராம்ராஜ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, கிராம மக்கள் லாரியில் இருந்து எண்ணெய்யை டப்பாக்களில் திருடி சென்றனர். மேலும், சிலர் சேற்றில் கலந்த எண்ணெயையும் வடிகட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo