ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை.. கொலையாளிகள் தலைமறைவு

by Staff / 18-04-2024 11:16:13am
ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை.. கொலையாளிகள் தலைமறைவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தவிட்டுராஜ் (60) என்பவர் மடத்துப்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் திடீரென சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தினர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தவிட்டுராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குத்திய மர்ம நபர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து தவிட்டுராஜ் உடலை கைப்பற்றிய வெம்பக்கோட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக தவிட்டுராஜை கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories