ரயில் மறியல் போராட்டம்.. மீனவர் கூட்டமைப்பினர் கைது

by Staff / 17-10-2024 03:22:48pm
ரயில் மறியல் போராட்டம்.. மீனவர் கூட்டமைப்பினர் கைது

இலங்கை கடற்படை அட்டூழியத்தை ஒடுக்க வலியுறுத்தி மதுரை கட்டபொம்மன் சிலை பகுதியில் இன்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகள் இந்த போராட்டத்தில் இணைந்தன. தொடர்ந்து, இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via