மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வர் மகனே என்ற பதாகையுடன் அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்த பெண்கள்

by Editor / 05-09-2023 10:44:15pm
 மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வர் மகனே என்ற பதாகையுடன் அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்த பெண்கள்

தமிழகத்தில் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இம்மாதம் 15ம் தேதி துவங்கப்பட உள்ளது. எனவே, இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்ற பெண்கள் யார் என்பதையும் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

இந்த நிலையில் தென்காசி நகராட்சி அருகே வந்து கொண்டிருந்தபோது 10வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர்  தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்தனர். அப்போது தாங்கள் மகளிர் உரிமை தொகுதிக்காக விண்ணப்பித்து உள்ள நிலையில் தங்களுக்கு முறையான விசாரணை வரவில்லை. தாங்கள் 100% தகுதியானவர்கள் எனவே மகளிர் உரிமைத்தொகை தாருங்கள் முதல்வர் மகனே என்ற விளம்பர பதாகை உடன் கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி தான் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதாகவும் மேலும் தங்கள் மனு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கூறுவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via