வட மாநிலங்கலில் கடும் பனிப்பொழிவு விமானங்கள் தாமதம்

வட மாநிலங்களை குளிர் உலுக்கி வருகிறது. டெல்லியுடன், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரயில்கள் மற்றும் பிற வாகனங்களின் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 50 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வர வேண்டிய 18 விமானங்களும் தாமதமாக வரும் என தெரிய வந்துள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
Tags :